நீண்ட 23 நாட்கள்... கண்டெடுக்கப்பட்ட சடலம்: பிரித்தானிய மக்களை கதிகலங்க வைத்த சம்பவத்தில் முக்கிய திருப்பம்
பிரித்தானியாவில் 23 நாட்களுக்கு முன்னர் மாயமான தாயார் தொடர்பில் தீவிரமாக தேடி வந்த பொலிசார், தற்போது சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
Wyre ஆற்றங்கரையில்
பிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான 45 வயது நிக்கோலா புல்லி என்பவர் கடந்த ஜனவரி 27ம் திகதி பகல் 9.15 மணிக்கு மர்மமான முறையில் திடீரென்று மாயமானார்.
Credit: Dave Nelson
கடைசியாக அவர் Wyre ஆற்றங்கரையில் காணப்பட்டதாக தெரியவந்த நிலையில், பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் அந்த ஆற்றில் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மட்டுமின்றி, அவரது அலைபேசியானது வேலை நிமித்தமாக குழு அழைப்பில் இருந்த நிலையில் மீட்கப்பட்ட பின்னர், அவர் திடீரென்று காணாமல் போனது மர்மமாகவே இருந்து வந்தது.
[7BB05G}
Credit: Dave Nelson
மேலும், Wyre ஆற்றங்கரையில் இருந்து அவரது வளர்ப்பு நாயும் மீட்கப்பட்டது. ஆனால் நிக்கோலா புல்லி மட்டும் என்ன ஆனார் என்பது துப்புத்துலங்காமல் இருந்து வந்தது.
சடலம் ஒன்றை மீட்டுள்ள பொலிசார்
இந்த நிலையில், நிக்கோலா புல்லி தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பொலிசார், சடலம் ஒன்றை மீட்டுள்ளதாகவும், கடைசியாக அவர் காணப்பட்ட பகுதியில் இருந்து அரை மைல் தொலைவில் அந்த சடலம் காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.
@PA
ஆனால், இதுவரை அடையாளம் காணப்பட்டாத நிலையில், அவர் மாயமான நிக்கோலா புல்லியா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இன்று பகல் 11.36 மணியளவில் Wyre ஆற்றங்கரையில் இருந்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததாகவும், அதன்படி, ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நிக்கோலா புல்லி குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது எனவும், அவர்கள் அடையாளம் கண்ட பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.