கனடாவில் சிறை தண்டனை பெற்ற குற்றவாளியை தேடும் காவல்துறை! காரணம் இதுதான்
கனடாவில் பரோல் விதியை மீறிய குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.
பரோல் விதிமுறை மீறல்
பொலிசார் இது குறித்து கூறுகையில், கிமோ டேவிட் (28) என்பவர் ஆயுதம் தொடர்பிலான குற்றங்களுக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில் பரோல் விதிமுறையை மீறிய டேவிட் தற்போது மாயமாகியுள்ளார். டேவிட் ஒஷாவா மற்றும் ரொறன்ரோ பகுதியில் இருக்கலாம், அவர் 5 அடி 10 அங்குலம் மற்றும் 90 கிலோ எடை கொண்டவர் ஆவார்.
Ontario Provincial Police
கையில் வடு
கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் காணப்படும் டேவிட்டின் வலது கையில் ஒரு வடு உள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.
அவர் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என ஒன்றாறியோ மாகாண பொலிசார் கூறியுள்ளனர்.