நேபாளப் பெருவெள்ளம்: மாயமான சுவிஸ் குடிமகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி
A Swiss woman missing in Nepal flash flood has been found alive: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள்.
மாயமான சுவிஸ் குடிமகள்
அப்படி மாயமானவர்களில், இந்தியா, இத்தாலி, பல்கேரியா, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகமான 20 Minuten செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில், சுவிஸ் குடிமகள் ஒருவரும் அடங்குவார்.
சுவிஸ் குடிமகள் ஒருவர் பெருவெள்ளத்தின்போது மாயமானதாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பெண் தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 20 Minuten ஊடகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |