மாயமான டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல்: கடைசி நொடியில் தப்பித்த பிரித்தானிய பிரபலம்
மூழ்கிய டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற தனியார் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், அந்த பயணத்தில் இருந்து கடைசி நொடியில் பிரித்தானியர் ஒருவர் விலகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியாக இல்லை
குறித்த நீழ்மூழ்கிக் கப்பலில் பயணப்பட்டுள்ள 58 வயது ஹமிஷ் ஹார்டிங் என்பவரது நண்பரான 61 வயது கிறிஸ் பிரவுன் என்பவரே அந்த நபர்.
Credit: Jam Press/Chris Brown
பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்ததாக கூறும் கிறிஸ் பிரவுன், அவர்கள் வசூலிக்கும் தொகையின் ஒரு பகுதியை செலுத்தியதாகவும், ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் தமக்கு திருப்தியாக இல்லை என்பதால் அந்த பயணத்தில் இருந்து விலகியாதாக கிறிஸ் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த நீர்மூழ்கிக் கப்பலானது கட்டுப்படுத்தப்படுவது கணினி விளையாட்டு பாணி என்பதை அறிந்துகொண்ட பின்னர் தான் பயணத்தை ரத்து செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
@AFP
22 அடி நீளம் கொண்ட சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பலானது தற்போது மாயமாகியுள்ள நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அதன் ஆக்ஸிஜன் சேமிப்பு மொத்தமாக தீர்ந்துவிடும் என மீட்புக்குழு தலைவர் எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி, தற்போது அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சத்தம் கேட்டதாக பதிவு செய்யப்பட்டாலும், உயிர் தப்புவது என்பது 1 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
தீவிரமாக யோசிக்க வைத்தது
அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சிக்கியுள்ள அந்த ஐவரையும் மீட்கும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவருவதாகவும், மீட்புக்குழுவினர் உரிய நேரத்தில் அந்த கப்பலை கண்டுபிடிப்பார்களா என்ற சிக்கலும் எழுந்துள்ளது.
@thesun
டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் குறித்து கிறிஸ் பிரவுன் தெரிவிக்கையில், அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் தரம் மற்றும் அதன் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் தம்மை தீவிரமாக யோசிக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 10 டன் எடை கொண்ட டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலானது ஞாயிற்றுக்கிழமையில் இருந்தே தொடர்பில் இல்லை.
1912ல் அட்லாண்டிக்கில் 12,500 அடிக்குள் மூழ்கி 1,517 உயிர்களை பலிகொண்ட டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்க்கவே இந்த நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்டு 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான மொத்த தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
@AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |