பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவன்: சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை
Missing Toddler Noah Woods Body Recovered: பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுவன்
பிரித்தானியாவின் சஃபோல்க்(Suffolk) பகுதியில் 3 வயது சிறுவன் நோவா வுட்ஸ்(Noah Woods) காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்.
அவர் பிராந்தம்(Brantham) கிராமத்தில் உள்ள விளையாட்டு மையத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு ஓடிச் சென்றுள்ளார். அவர் கடைசியாக சந்து ஒன்றின் வழியாக வீட்டு வசதிப் பகுதி அருகே சுற்றித் திரிந்தது பார்க்கப்பட்டுள்ளது.
சிறுவன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர் தன்னார்வலர்கள், காவல்துறையினர், கடற்படையினர் இணைந்து சிறுவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இந்த பணியில் மீட்பு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பிராந்தம் கிராமத்தில் உள்ள டிகாய் குளத்தில்(Decoy Pond) சிறுவன் நோவா வுட்ஸ் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் டாம் பியர்ஸ்(Tom Pearse) தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அடையாளம் காணும் பரிசோதனை நடைபெறவில்லை. இருப்பினும் சிறுவனின் குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்குரிய சூழல் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.