கனடாவில் காணாமல் போன 29 வயது இளம்பெண்ணின் உடல் மீட்பு!
கனடாவில் 8 மாதத்திற்கு மேலாக காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வான்கூவர் தீவை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணான அமி குத்ரி கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி கடைசியாக காணப்பட்டார்.
இதன்பின்னர் அமி காணாமல் போயிருக்கிறார். இந்த நிலையில் அமி துரதிர்டவசமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர். நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட பொலிசார் அமி மரணத்தில் குற்றவியல் சந்தேகங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அப்பெண்ணின் மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த தேடுதலில் உதவிய ஊடகங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.