டிஎன்ஏ மூலம் தீர்ந்த 10 ஆண்டுகால மர்மம்! புளோரிடாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய வழக்கு
அமெரிக்காவில் காணாமல்போன இளைஞர் குறித்த 10 ஆண்டுகால மர்மம், டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தீர்க்கப்பட்டது.
காணாமல் போன இளைஞர்
2015ஆம் ஆண்டில் புளோரிடா மாகாணத்தில் ஜேக்கப் லியோன் என்ற இளைஞர், தனது 19வது வயதில் காணாமல் போனார்.
அதனைத் தொடர்ந்து அவரது தாய் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், லியோனை மூன்று மாதங்களாக காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் வனப்பகுதியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தற்செயலாக எலும்புக்கூட்டுத் துண்டுகளைக் கண்டெடுத்தார்.
அவை யாருடைய எச்சங்கள் என கண்டறியும் முயற்சியில் மாவட்ட மருத்துவப் பரிசோதகர் இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டார்.
டிஎன்ஏ பரிசோதனை
இந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மூலமாக எலும்புக்கூட்டு எச்சங்கள் காணாமல்போன ஜேக்கப் லியோனுடையது என்று தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் திகதி அன்று, மிராமர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் லியோனுடையது என உறுதிப்படுத்தப்பட்டதாக வால்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் (WCSO) தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
என்றாலும், லியோனின் மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனால் அதிகாரிகள், உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் முந்தைய ஆதாரங்களையும் பயன்படுத்தி பதில்களைக் கண்டறிய முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |