சுற்றுலா சென்ற இடத்தில் சுவிஸ் இளம்பெண் செய்த தவறு: கமெராவில் சிக்கிய காட்சி
இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், புராதானச் சின்னம் ஒன்றை சேதப்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கமெராவில் சிக்கிய காட்சி
சுற்றுலா வழிகாட்டி ஒருவர், ரோமிலுள்ள 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதானச் சின்னமான Colosseum என்னும் உலக அதிசயமாக விளங்கிய சுவரில் இளம்பெண் ஒருவர் ஏதோ கிறுக்குவதைக் கவனித்துள்ளார்.
Andrea Ronchini/NurPhoto via Getty Images
அதை வீடியோவாக எடுத்த அவர், அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம், அந்த இளம்பெண் செய்தது சட்ட விரோதச் செயல் என்று கூற, அவர்களோ, அவள் சின்னப்பிள்ளைதான், அவள் எந்த தவறும் செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார்கள்.
பொலிசில் புகார்
ஆனால், இந்த சம்பவம் குறித்து இத்தாலி பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது. பொலிசார் அந்த இளம்பெண்ணையும், அவரது பெற்றோரையும் ரோமிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
Nuovo sfregio al Colosseo, una turista svizzera incide le sue iniziali: rischia il carcere e una maximulta. E' stata filmata da una guida e denunciata #ANSA https://t.co/LwYpfzyrdK pic.twitter.com/ZptKpOD1Db
— Agenzia ANSA (@Agenzia_Ansa) July 15, 2023
அந்த பெண்ணுக்கு, பெரும்தொகை அபராதம் அல்லது சிறைத்தண்டனை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |