தவறாக கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் மனநல மருத்துவமனையில் கொடுமையை அனுபவித்த நபர்!
அமெரிக்காவின் ஹவாய் (Hawaii) மாநிலத்தில், தவறாக கைது செய்யப்பட்ட ஒருவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக மனநல மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் வெட்டவெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.
வேறொருவர் புரிந்த குற்றத்திற்கு, 2017-ஆம் ஆண்டு, வீடற்று வீதியில் வாழ்ந்துவந்த அந்த நபர் தவறாகக் கைது செய்யப்பட்டார்.
2006-ஆம் ஆண்டில் போதைப் பொருள் வழக்குத் தொடர்பில், தோமஸ் காசல்பெர்ரி (Thomas Castleberry) என்பவருக்குப் பதில், ஜோஷுவா ஸ்பிரிஸ்டர்பாக் (Joshua Spriestersbach) என்ற அந்த வீடற்றவர் தவறுதலாகக் கைது செய்யப்பட்டார்.

நான் அவர் இல்லை என ஸ்பிரிஸ்டர்பாக் மீண்டும் மீண்டும் வலியுறுத்த, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முடிவு செய்யப்பட்டது.
2 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்ததும் இல்லாமல், அவருக்கு மனநல மருந்துகளும் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டன.
பின்னர், இந்த தவறை மூடி மறைப்பதற்காக, சத்தம் இல்லாமல், வெறும் 50 சென்ட் சில்லறையுடன் அவர் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரு ஆடவர்களின் புகைப்படங்கள், கைரேகைகள் ஆகியவற்றை ஒப்பிட்டிருந்தாலே, உண்மை தெரிந்திருக்கும் என வழக்கறிஞர்கள் கூறினர்.
இறுதியாக, ஒரு மனநல ஆலோசகரின் முயற்சியில், உண்மையான காசல்பெர்ரி 2016-ஆம் ஆண்டிலிருந்து அலாஸ்கா சிறையில் இருப்பது தெரிய வந்தது.
நடந்த தவறு, பதிவுகளில் சேர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஜனவரியில், ஸ்பிரிஸ்டர்பாக் விடுவிக்கப்பட்டார். 50 வயதான அவர், தற்போது தம் சகோதரியுடன் வசித்து வருகிறார். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        