10 ஆண்டுகளுக்கு முன் ரசிகன்..!சதம் விளாசி அதே அணிக்கு கோப்பை கனவை நிறைவேற்றிய மிட்சேல் ஓவன்
10 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகராக இருந்த மிட்செல் ஓவன் இன்று அதே அணியை தனது அதிரடி சதத்தின் மூலம் வெற்றி பெற வைத்துள்ளார்.
கோப்பையை வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ்
பிக்பாஷ் டி20 தொடர் இறுதிப் போட்டியில், ஹோபர்ட்டில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் முதல் முறையாக வெற்றி கோப்பை கைப்பற்றியது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய சிட்னி அணி 182 ஓட்டங்கள் குவித்து கோப்பைக்கான வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
சற்று கடினமான இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் களமிறங்கி இருந்தாலும், மிட்சேல் ஓவனின் அதிரடி சதத்தால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக வெற்றி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மொத்தம் 42 பந்துகளை எதிர்கொண்ட ஓவன், 11 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
Barely believable 🤯
— KFC Big Bash League (@BBL) January 27, 2025
Mitch Owen has hit NINE SIXES in 30 balls. #BBL14 pic.twitter.com/pqWNe0Vk5j
ஓவனின் பழைய புகைப்படம் வைரல்
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரசிகராக ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடிய மிட்சேல் ஓவன், பிரபலமான பிக்பாஷ் டி20 தொடரில் இன்று தனது அதிரடியான சதத்தால் அதே ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கோப்பை கனவை நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
In 2015, 13-year-old Mitch Owen was a die-hard Hobart Hurricanes fan, pictured here celebrating a win against Brisbane Heat.
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 27, 2025
Ten years later, he’s scored a match-winning century in the final to secure their first BBL trophy.
Dreams do come true 🤩 pic.twitter.com/3okV0j8wBk
இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகராக இருந்த மிட்சேல் ஓவனின் புகைப்படத்தையும், தற்போது சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட புகைப்படத்தையும் இணைத்து ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |