பிரேவிஸிற்கு தரமான பதிலடி கொடுத்த மார்ஷ்! அதிரடி அரைசதம் விளாசல்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20யில் மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்தார்.
எல்லிஸ் அபாரம்
கெய்ர்ன்ஸில் நடந்து வரும் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது.
டெவல்ட் பிரேவிஸ் 53 (26) ஓட்டங்களும், வான் டர் டுசன் 38 (26) ஓட்டங்களும் எடுத்தனர். நாதன் எல்லிஸ் (Nathan Ellis) 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
மிட்செல் மார்ஷ்
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் டிராவில் ஹெட் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த இங்கிலிஸ் டக்அவுட் ஆகி வெளியேற, அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அதிரடியில் மிரட்டிய மார்ஷ் 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
74வது டி20 போட்டியில் விளையாடியுள்ள மிட்செல் மார்ஷ் அடித்த 10 அரைசதம் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |