சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடிய வீரர்! செக் வைத்த ஜடேஜா..வீடியோ
மும்பையில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் 81 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் ஒருநாள் போட்டி
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி அவுஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். ஹெட் 5 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் போல்டானார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவன் ஸ்மித் பவுண்டரிகளை விரட்டி நெருக்கடி கொடுத்தார்.
மார்ஷ் அதிரடி அரைசதம்
எனினும் அவரை 22 ஓட்டங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியேற்றினார். மறுமுனையில் விஸ்வரூப ஆட்டம் ஆடிய மார்ஷ், அதிரடியாக அரைசதம் அடித்தார்.
70வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 14வது அரைசதம் ஆகும். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்தார்.
Here's how Marsh brought up his 50!
— cricket.com.au (@cricketcomau) March 17, 2023
Tune in now via @kayosports #INDvAUS pic.twitter.com/BNpuwvmRL2
வெளியேற்றிய ஜடேஜா
ஆனால் மார்ஷின் வேகத்திற்கு சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா முட்டுக்கட்டை போட்டார். மார்ஷ் 81 (65) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். அவுஸ்திரேலிய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
@BCCI
@BCCI
@AP image