ஆப்கானிடம் படுதோல்வி..இந்திய அணியை மறைமுகமாக எச்சரித்த அவுஸ்திரேலிய கேப்டன்
அரையிறுதிக்கு செல்ல இந்திய அணியை வீழ்த்துவது கட்டாயம் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
படுதோல்வி
செயிண்ட் வின்சென்ட்டில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி படுதோல்வியடைந்தது.
இதனால் இந்திய அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மிட்செல் மார்ஷ்
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் கூறுகையில்,
''அவர்கள் (ஆப்கான்) 20 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றனர். மேலும் உண்மையை கூறுவதென்றால், அவர்கள் ஒரு நல்ல கிரிக்கெட் விளையாட்டை விளையாடினர். இன்றிரவு நாங்கள் வெளியேறினோம். பல அணிகள் இந்த உலகக்கிண்ணத் தொடரில் முதலில் பந்துவீசுவதை யோசனையாக வைத்து வெற்றி பெற்றனர்.
ஆனால் நாங்கள் அதில் தோற்றுவிட்டோம். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் திரும்புவோம். அது எங்களுக்கு தெளிவாகிறது. நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு அந்த அணியை விட (இந்தியா) சிறந்தது இருக்க முடியாது. நாங்கள் விரைவில் நகர்வோம்'' என தெரிவித்துள்ளார்.
மார்ஷ் தனது கூற்று மூலம் இந்திய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா முன்னேறிவிடும் என்று மறைமுகமாக எச்சரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |