குழந்தை பருவ கனவு.,இது எனது பாக்கியம்: நியூசிலாந்தின் புதிய கேப்டன் உருக்கம்
நியூஸிலாந்திற்காக விளையாட வேண்டும் என்பது தனது சிறுவயது கனவாக இருந்ததாக மிட்செல் சான்டனர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
மிட்செல் சான்டனர்
கேன் வில்லியம்சன் அணித்தலைவர் பதவியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு யார் தலைமை வகிப்பார் என்ற கேள்வி எழுந்தது.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட ஆல்ரவுண்டர் மிட்செல் சான்டனர் சரியாக இருப்பார் என நிர்வாகம் முடிவெடுத்து அறிவித்தது.
இதன்மூலம் 28ஆம் திகதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான தொடர் மூலம் முழுநேர அணித்தலைவராக சான்டனர் செயல்பட உள்ளார்.
எனக்கு கிடைத்த பாக்கியம்
அணித்தலைவரானது குறித்து சான்டனர் கூறுகையில், "இது வெளிப்படையாக ஒரு பெரிய மரியாதை மற்றும் எனக்கு கிடைத்த பாக்கியம். சிறு குழந்தையாக இருக்கும்போது நியூஸிலாந்திற்காக விளையாட வேண்டும் என்பது கனவாக இருந்து.
ஆனால் எனது நாட்டை அதிகாரப்பூர்வமாக இரண்டு வடிவங்களில் வழிநடத்தும் வாய்ப்பை பெறுவது இன்னும் சிறப்பு. இது ஒரு புதிய சவால் ஆகும்.
மேலும் நமக்கு முன்னால் இருக்கும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் முக்கியமான காலகட்டத்தில் சிக்கிக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |