வக்கார் யூனிஸின் 32 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்த ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் சாதனை
அவுஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்(mitchell starc), இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொடரின் 4 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன் மூலம், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்(WTC) அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், மிட்செல் ஸ்டார்க் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 41 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக இந்திய வீரர் முகமது சிராஜ், 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 39 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.
32 ஆண்டு கால சாதனை முறியடிப்பு
மேலும், 2025 ஆம் ஆண்டில் 55 விக்கெட்களை கைப்பற்றிய ஸ்டார்க் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஒரு ஆண்டில், 50க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தி குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர் என்ற உலக சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.
இந்த ஆண்டில், 55 விக்கெட்களை வீழ்த்திய ஸ்டார்க், 28.3 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
முன்னதாக, 1993 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ்(waqar younis), 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்களை வீழ்த்தி, 29.5 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்ததே உலக சாதனையாக இருந்தது.

தற்போது, வக்கார் யூனிஸின் 32 ஆண்டுகால உலக சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |