மலிங்காவின் ஆல் டைம் சாதனையை முறியடித்த அவுஸ்திரேலிய வீரர்
ஐசிசி போட்டியில் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) அரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார்.
இலங்கையின் மூத்த வீரர் லசித் மலிங்காவின் (Lasith Malinga) ஆல் டைம் சாதனையையும் ஸ்டார்க் முறியடித்தார்.
ஆன்டிகுவாவில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியின் முதல் ஆட்டத்தில் Aussie Speedgun என அழிக்கப்படும் ஸ்டார்க் இந்த மைல்கல்லை எட்டினார்.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசனை வீழ்த்திய ஸ்டார்க், ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்த வேகப்பந்து வீச்சாளர் ஒருநாள் உலகக் கோப்பையில் 65 விக்கெட்டுகளையும், T20களில் 30 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இதன் மூலம் 94 விக்கெட்டுகளை வீழ்த்திய யார்க்கர் கிங் மலிங்கா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
வித்தியாசமான பந்துவீச்சு பாணியில் பந்துவீச்சாளராக வளர்ந்த மலிங்கா, ஒருநாள் உலகக் கோப்பையில் 56 விக்கெட்டுகளையும், டி20 உலகக் கோப்பையில் 38 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |