இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த ஸ்டார்க்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 12 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெஸ்ட்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 19-வது முறையாகும். தான் வீசிய 22 பந்துகளிலேயே அவர் 5வது விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) படைத்தார்.
அத்துடன் இலங்கை ஜாம்பவான் சமிந்த வாஸினை பின்னுத்தள்ளினார். சமிந்த வாஸ் 761 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், ஸ்டார்க் 767 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் (Wasim Akram) 916 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |