ஐபிஎல் தொடங்கினாலும் அவர் இந்தியாவுக்கு திரும்பமாட்டார்: டெல்லி அணிக்கு பேரிடி
அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு திரும்ப மாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்
இந்தியா, பாகிஸ்தான் மோதலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததால் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிய வீரர்களை, ஓரிரு நாட்களுக்குள் மீண்டும் ஒன்றிணைக்குமாறு அணி நிர்வாகங்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டது.
மிட்செல் ஸ்டார்க்
இந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) இந்தியாவுக்கு திரும்ப மாட்டார் என கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய வீரர்கள் பலரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராக இருப்பதால், அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப மாட்டார்கள்.
எனவே, மிட்செல் ஸ்டார்க்கும் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் இந்தியாவிற்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் நடப்பு ஐபிஎல் தொடரில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெல்லி அணிக்கு பந்துவீச்சில் தூணாக இருப்பதால் அவர் திரும்ப விளையாடாதது பெரும் பின்னடைவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |