மைத்துனியின் மர்ம மரணம்! மௌனம் கலைத்த அமெரிக்க முன்னாள் செனட்டர்
அமெரிக்காவில் கேரி எலிசபெத் ரோம்னியின் அதிர்ச்சி மரணம் குறித்து, முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னி மௌனம் கலைத்துள்ளார்.
கேரி எலிசபெத் ரோம்னி
கலிபோர்னியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் கேரேஜுக்கு அடுத்து வீதியில் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், Utahவின் முன்னாள் செனட்டருமான மிட் ரோம்னியின் மைத்துனி கேரி எலிசபெத் ரோம்னி இறந்துகிடந்தார்.
உள்ளூர் மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதியான வலென்சியாவில் உள்ள ஒரு கேரேஜுக்கு அருகில் கேரி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரது சடலம் கைப்பற்றப்பட்ட பின் பேசிய லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் டேனியல் விஸ்காரா,
"உயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது தற்செயலானதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அதிகாரி இதுவரை எங்களுக்கு என்ன கொடுத்துள்ளார் என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை" என்றார்.
மனம் உடைந்துள்ளது
இந்த நிலையில் Utahவின் முன்னாள் செனட்டரான மிட் ரோம்னி தனது மைத்துனியின் மரணம் குறித்து கூறுகையில், "எங்கள் அனைவருக்கும் அரவணைப்பையும், அன்பையும் கொண்டு வந்த கேரியின் இழப்பால் எங்கள் குடும்பம் மனம் உடைந்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் தனியுரிமையைக் கேட்கிறோம்" என்றார்.
மேலும், தனது சகோதரர் நான்கு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தது தெரிய வந்தது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |