77 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகள்! பெங்களூரு அணியை பந்தாடிய சிங்கப்பெண்
மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
ஹேலே மேத்யூஸ் மிரட்டல் பந்துவீச்சு
பிரபோர்னே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் ஆடிய பெங்களூரு அணி 155 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ஓட்டங்களும், மந்தனா 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
மும்பை அணியில் தரப்பில் ஹேலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணியில், பவுண்டரிகளை விளாசிய ஹேலே மேத்யூஸ் 38 பந்துகளில் 77 ஓட்டங்கள் விளாசினார்.
@AFP
அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த நட் சிவெர்-பிரண்ட் அதிரடியாக 29 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார்.
மும்பை அபார வெற்றி
மும்பை அணி 14.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்து மிரட்டலாக வெற்றி பெற்றது. அரைசதம் விளாசியதுடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹேலே மேத்யூஸ் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்.
@AFP
Twitter/@wplt20