முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை
முதல் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
பிரபோர்னே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் துடுப்பாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது.
கேப்டன் லென்னிங் 35 ஓட்டங்களும், ஷிகா பாண்டே 27 ஓட்டங்களும் எடுத்தனர். மும்பை அணியின் தரப்பில் ஐ வோங், ஹேலே மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளும், மெலி கெர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
@Twitter (JayShah)
அதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.
அரைசதம் விளாசிய நட் சிவெர்
நட் சிவெர் 60 ஓட்டங்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ஓட்டங்களும் எடுத்தனர். டெல்லி அணியின் தரப்பில் ராதா யாதவ், ஜெஸ் ஜோனஸன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் முதல் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரை மும்பை இந்தியன்ஸ் வென்றது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை நட் சிவெரும், ஹேலே மேத்யூஸ் தொடரின் சிறந்த வீராங்கனை விருதையும் கைப்பற்றினர்.
@Twitter (JayShah)