காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பருகுவது ஆபத்தா? எச்சரிக்கை தகவல்
தேன் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் நிறைந்தது. இது ரசாயனம் இல்லாத, சர்க்கரைக்கு மாற்றான இனிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது.
உடல் எடை குறைப்புக்கு உதவும், செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கும், உடல் வெப்பச் சமநிலையை நிர்வகிக்க உதவும் என்று பலவிதமான நன்மைகளை அளிக்கும்
அதனால் தான் சிலர் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்த வருகிறார்கள். உண்மையில் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும்.
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஆயுர்வேத மருத்துவத்தின் நடைமுறைகள் தேனை சூடாக்கக் கூடாது என்றும் தேநீர், பால் அல்லது தண்ணீர் போன்ற சூடான திரவங்களுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது என்றும் பரிந்துரைக்கின்றன.
இதுகுறித்து ஆயுர்வேத நிபுணர் ஒருவர் தேனை சூடுபடுத்துவதால், நம் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து, அது பல வியாதிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார். அவர் கூறுவதாவது,
“ஆயுர்வேத மருத்துவத்தில், தேன் முக்கியமான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் ஒவ்வொரு உணவையும் எப்படி உண்ண வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அது அந்த உணவின் தன்மையை பாதிக்காமல், அதில் உள்ள சத்துக்களை நாம் முழுமையாகப் பெறுவதற்கு உதவும்.
தேனை சூடாக உட்கொள்ளும் போது அது உடலில் 'அமா' எனப்படும் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. நீண்ட காலத்திற்கு இதை உட்கொண்டால், உடலில் நச்சு அதிகமாகி, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று கூறியுள்ளார்.