Work from home: பெரும்பான்மை ஆதரவு தெரிவித்துள்ள சுவிஸ் அரசியல் கட்சிகள்
சுவிட்சர்லாந்தில், வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்யும் திட்டம் ஒன்றிற்கு அரசியல் கட்சிகளிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
ஆதரவு தெரிவித்துள்ள சுவிஸ் அரசியல் கட்சிகள்
சுவிஸ் நாடாளுமன்றத்தின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரிகள் கமிட்டி, work from home என்னும் வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்தல் குறித்த திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
பணியாளர்கள் 14 முதல் 17 மணி நேரம் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்பது முதலான பல விடயங்கள் அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த திட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளன. என்றாலும், The Social Democrats மற்றும் the Greens கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அவை, வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்வோரின் மன நலன் குறித்து கவலை தெரிவித்துள்ளன.
திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளோ, தொழிலாளர் சட்டம் இந்த காலத்துடன் ஒத்துவராததாக உள்ளது என்றும், அது, பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தின் மாறும் தேவைகளுக்கேற்ப இல்லை என்றும் வாதம் முன்வைத்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |