கொரோனா தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொண்டால் என்ன நடக்கும்? ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய விடயம்
கொரோனா தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொண்டால் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்து பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.
Pfizer, AstraZeneca கொரோனா தடுப்பூசி டோஸையும், மாடர்னா கொரோனா தடுப்பூசி டோஸையும் கலந்து போட்டுக்கொள்வது சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்று பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு ஆய்வு கூறுகிறது.
Oxford-AstraZeneca அல்லது Pfizer-BioNTech தடுப்பூசிகளின் முதல் டோஸ், மாடர்னா அல்லது Novavax தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் கொரோனாவுக்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் என்று புதிய ஆய்வு தெரிவித்திருக்கிறது.
பரிசோதனையில் பங்கேற்பாளர்கள் முதல் டோஸ் Pfizer, AstraZeneca பெற்றனர், பின்னர் ஒன்பது வாரங்களுக்குப் பிறகு Novavax/Moderna மருந்தைப் பெற்றனர்.
மொத்தம் 1,070 பங்கேற்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படவில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான Com-COV குழு கண்டறிந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவம் மற்றும் தடுப்பூசி மருத்துவத்தில் இணைப் பேராசிரியரும், முதன்மை ஆய்வாளருமான Matthew Snape கூறியதாவது, cellular நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, Oxford-AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் பிற தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டாவது டோஸாக போட்டுக்கொண்டால் அது சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என தெரிவித்துள்ளார்.