பாலில் இதையெல்லாம் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் அனைத்தும் பாலில் அடங்கியுள்ளன, எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் பாதுகாப்புக்கும் கால்சியம் மிகவும் அவசியமான ஒன்று.
பாலில் கால்சியம் அதிகம் இருப்பதால், தினமும் இரண்டு வேளை பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பாலுடன் மற்றொரு பொருளை சேர்த்துக் குடித்தால் என்ன நடக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தினமும் இரவு தூங்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பாலில் சோம்பு கலந்து குடிக்கும் போது சுவாச பிரச்சனைகளை சீராக்குகிறது, மேலும் இதிலுள்ள ஆன்டி பக்டீரியல் பண்புகள் நோயை அண்ட விடாமல் தடுக்கின்றன.
பாலில் பட்டை கலந்து குடிக்கும் போது, உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
உலர் திராட்சை, உலர் அத்திப்பழம், பேரிச்சம் பழம் போன்றவற்றை பாலில் கலந்து குடித்து வந்தால், அது உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க உதவும். மேலும், இந்த வகை பாலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பாலில் இஞ்சியை தட்டிப் போட்டுகுடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளது.