சிகிச்சையில் தயாளு அம்மாள் - மருத்துவமனைக்கு விரைந்த மு.க.அழகிரி
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
தயாளு அம்மாள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று(03.03.2025) இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மு.க.அழகிரி வருகை
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த நிலையில், தற்போது மீண்டும் அப்போல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
தற்போது தயாளு அம்மாள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள நிலையில், அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |