ராஜினாமா செய்தார் பழனிசாமி... தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது எங்கே..எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் திகதி குறித்து அதிகாரப்பூர்வ வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி நடந்த சட்டமன்றத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று மே 2ம் திகதி நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது, திமுக மட்டும் 133 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனி பெருபான்மைப் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி தோல்வுயுற்றதை தொடர்ந்து இன்று மே 3ம் திகதி எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனையடுத்து, மே 7ம் திகதி தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் ஆளுநர் இல்லத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.