கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின்: கண்கலங்கி அழுத தொண்டர்கள்
சென்னை கொளத்தூரில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின, இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்துள்ளது.
முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்தனர், இது திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்று தனக்கு வாக்களித்த கொளத்தூர் மக்களை சந்தித்து முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தார், தொண்டர்கள் பலரும் கண்கலங்கியபடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர், அவருடன் வந்த சேகர்பாபு கண்கலங்க தொண்டர்களும் அழுதனர்.
யாரும் அழவேண்டாம் என முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார், தன் அரசியல் பயணத்தில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளதாகவும், இதை பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறியது குறிப்பிடத்தக்கது.