ஓடும் பேருந்தில் திடீரென எறிய முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார் தெரியுமா? வாயடைத்து போன மக்கள்.. வைரலாகும் வீடியோ
சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென பேருந்தில் ஏறி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கண்ணகி நகரில் தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க ஸ்டாலின் கண்ணகி நகருக்கு வந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென எறியுள்ளார். அப்போது மாநகர பேருந்தில் பயணித்த பொதுமக்களிடம் பயண வசதிகள் மற்றும் குறைகளை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவிற்கு பயனளித்து வருகிறது என்று பெண்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதையடுத்து பயணிகள் உற்சாகத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
இதையடுத்து பேருந்தில் இருந்து கீழே இறங்கி தனது காரில் புறப்பட்டு சென்றார். தற்பொழுது பேருந்தில் முதல்வர் ஆய்வு செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.