இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்
mk stalin react to will dmk support seeman in by election: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா?
அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.

சீமான் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சீமானிடம் அது குறித்து கேட்டபோது, "நான் எப்போதும் பொது வேட்பாளர். அனைத்து சாதி, மதத்திற்கான பொதுவேட்பாளர் நாம் தமிழர் கட்சி" என பதிலளித்தார்.
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, தேர்தல் தேதி அறிவிக்கட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.