சட்டம்- ஒழுங்கை சீரழித்துவிட்ட சோப்ளாங்கி தவெக அரசு- மு.க.ஸ்டாலின்
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது..,
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை திமுக மகளிர் அணி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! என கூறியுள்ளார்.
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
— M.K.Stalin (@mkstalin) October 30, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |