தவறு செய்த எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு. க ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே, அக்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்துள்ள தீவிரமான குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், மாவட்டப் பெண் ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்கு அத்துமீறிச் சென்று தொந்தரவு கொடுத்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான எம். ரவிசங்கர் மீது, அடிப்படை வசதிகள் குறித்து முறையிடச் சென்ற கார்த்திக் குமார் என்ற உள்ளூர்வாசியைச் சரமாரியாகத் தாக்கி எட்டி உதைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களைக் கிளப்பியது.
இந்நிலையில், தவறு செய்த எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், வெறும் பேச்சுக்களால் காலம் கழிக்க முடியாது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
— M.K.Stalin (@mkstalin) November 12, 2026
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |