மாமன்னன் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்!
மாமன்னன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் கட்டித்தழுவியதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'.
இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் உட்பட பலரும் நடித்துள்ளனர், இப்படம் .இன்று வெளியானது.
இப்படத்தை மாமன்னன் படக்குழுவினருடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இணைந்து பார்த்துள்ளார்.
இதுகுறித்து டுவிட் செய்துள்ள மாரி செல்வராஜ், மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய முதல்வர் முக ஸ்டாலினுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் ❤️❤️❤️ @Udhaystalin @arrahman @KeerthyOfficial @RedGiantMovies_ #MAAMANNAN ? pic.twitter.com/1snE2uBQeF
— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |