பிரித்தானியாவின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் வாழ்த்து
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
முதல் தமிழ்ப்பெண்ணுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் வாழ்த்து
Hearty congratulations to @Uma_Kumaran on becoming the first-ever Member of Parliament for Stratford and Bow and the first-ever Tamil woman to become a member of the UK Parliament.
— M.K.Stalin (@mkstalin) July 5, 2024
You bring great pride to the Tamil community. https://t.co/sUuM2PFr7g
பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்று, பிரித்தானியாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழ்ப் பின்னணிகொண்டவராகிய உமா குமரனுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் சமூக ஊடகமாகிய எக்ஸில் வெளியிட்டுள்ள பதிவில், ’உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உமா குமரன், அதன் மூலம் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |