40 பந்தில் செஞ்சுரி- அபார சாதனை படைத்த பூரன்
மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் 40 பந்தில் சதம் அடித்து அபார சாதனை படைத்துள்ளார் MI நியூயார்க் அணியின் கேப்டனான நிகோலஸ் பூரன்.
அமெரிக்காவில் சர்வதேச வீரர்களை கொண்டு மேஜர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் அணிகளை நிர்வகிக்கும் உரிமையாளர்களே அங்கும் அணிகளை வாங்கியுள்ளனர், முதல் சீசனின் இறுதிப்போட்டியில் MI நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.
இதில் முதலில் ஆடிய சியாட்டல் அணி 9 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் எடுத்தது, 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது MI நியூயார்க் அணி.
ஆட்டத்தின் 3வது பந்தில் ஸ்டீவன் டெய்லர் ஆட்டமிழக்க, அணித்தலைவர் நிகோலஸ் பூரன் களமிறங்கினார், தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
History in the making! ?
— Major League Cricket (@MLCricket) July 31, 2023
MI New York triumphs as the first-ever MLC champions! ? ? #MLCFinal #MLC2023 pic.twitter.com/kF7gUOI5CB
16 பந்தில் அரைசதம், 40 பந்தில் சதம் என துவம்சம் செய்தார், 55 பந்துகளில் 137 ஓட்டங்கள் எடுத்து அணியின் சாம்பியன் ஆக்கினார்.
மொத்தமாக 10 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் அடித்த பூரன் தலைமையிலான அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |