அவுஸ்திரேலியாவில் மாயமான நிர்வாக இயக்குநரின் மனைவி: 7 நாட்களுக்குப் பின் காத்திருந்த அதிர்ச்சி
அவுஸ்திரேலியாவில் மாயமான பெண்ணொருவர் ஒரு வாரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாயமான பெண்
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள MLG Oz நிறுவனம் Trailers, Dump trucks, Excavators போன்ற வாகன உபகரணங்களை அகழ்வாராய்ச்சிகள், சுரங்கங்கள் போன்றவற்றிற்காக வழங்குகிறது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முர்ரே லீஹி. இவரது மனைவி மிஷேல் ஜோன் லீஹி பெர்த் மருத்துவமனையில் இருந்து காணாமல்போனார்.
50 வயதான மிஷேல் ஜோன், நெட்லாண்ட்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள Ramsay Health Clinicயில் இருந்து வெளியேறிய பிறகு மாயமானதாக தெரிய வந்தது. 
சடலமாக மீட்பு
இந்த நிலையில் ஒருவாரம் கழித்து வியாழக்கிழமை அன்று மிஷேல் ஜோன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆனால், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று மேற்கு அவுஸ்திரேலிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் MLG Oz வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிர்வாக இயக்குநர் முர்ரே லீஹியின் மனைவி மிஷேல் லீஹியின் மறைவை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த துயரமான நேரத்தில் முர்ரே மற்றும் அவரது குடும்பத்தினருடன் முழு MLG குடும்பமும் துணை நிற்கிறது" என தெரிவித்துள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |