கடுமையான மூடுபனியின் நடுவே ஆங்கிலக்கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்: வெளியான வீடியோ
கடும் குளிர், மூடுபனியினூடே, சுமார் 45 புலம்பெயர்வோரை பிரித்தானிய எல்லை பாதுகாப்புப்படையினர் மீட்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிரான்சிலிருந்து, கடுமையான மூடுபனியினூடே சிறு படகொன்றில் சுமார் 45 புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இங்கிலாந்தின் கென்ட் பகுதியில், Dungeness என்ற இடத்தில், எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை மீட்டுக் கரை சேர்த்துள்ளனர்.
நேற்று (19.12.2021), அதிகாலை 7.00 மணியளவில், லைஃப் ஜாக்கெட் கூட இல்லாமல் குளிரில் நடுங்கியபடி, களைத்துப்போன நிலையில் காணப்பட்ட அந்த புலம்பெயர்வோரை, பொலிசார் அழைத்துச் செல்வதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.
அதேபோல், நேற்று முன்தினமும் (18.12.2021), சுமார் 100 புலம்பெயர்வோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் மட்டும் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை வந்தடைந்துள்ள புலம்பெயர்வோரின் எண்ணிக்கை 26,792 ஆகியுள்ளது.
ஆனால், 2020இல் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை வந்தடைந்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வெறும் 8,410 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.