சில்லாய் சிதறும் கமலின் மக்கள் நீதி மய்யம்! கட்சியலிருந்து மேலும் ஒரு முக்கிய புள்ளி விலகல்!
மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளர் முருகானந்தம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் 133 இடங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 2.45 விழுக்காடு வாக்குகளே பெற்றது.
தேர்தல் முடிவை தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அவரை தொடர்ந்து கட்சியின் பொதுச செயலாளர்களில் ஒருவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவரும், மதுரவாயல் தொகுதி மநீம வேட்பாளராக போட்டியிட்டு 12.2 சதவித வாக்குகள் பெற்று 3ம் பிடித்து காட்டிய ‘சென்னை தமிழச்சி' பத்மப்ரியாவும் விலகினார்.
இந்நிலையில், இன்று கட்சியின் பொது செயலாளர் முருகானந்தம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுதாக அறிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு 100 தொகுதிகளை ஒதுக்கியதே மக்கள் நீதி மய்யத்தின் தோல்விக்கு காரணம் என முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.
நேர்மையான, சுதந்திரமான வழியில் மக்களுக்கான சமூகப் பணியாற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன், ஆனால் இன்று அதற்கான சூழல் அங்கு முற்றிலுமாக இல்லை என்ற நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுகிறேன். (1/2) pic.twitter.com/GwmwfwnrOp
— Rtn.PDG.Er.Muruganandam M (@MMMTRICHY) May 19, 2021
கட்சியில் சர்வாதிகாரம் இருப்பதாக குற்றம்சாட்டிய முருகானந்தம், நேர்மையான, சுதந்திரமான வழியில் மக்களுக்கான சமூகப் பணியாற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன், ஆனால் இன்று அதற்கான சூழல் அங்கு முற்றிலுமாக இல்லை என்ற நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுகிறேன்.
மக்களுக்கான எனது நேர்மையான சமூகப் பணி என்றும் தொடரும்.(2/2)
— Rtn.PDG.Er.Muruganandam M (@MMMTRICHY) May 19, 2021
M முருகானந்தம்#MMMTrichy pic.twitter.com/CF4gvmt3Pt
மக்களுக்கான எனது நேர்மையான சமூகப் பணி என்றும் தொடரும் என அறிவத்துள்ளார்.