ரொனால்டோவின் சவுதி அரேபிய கால்பந்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர இருக்கும் நட்சத்திரம்
சவுதி அரேபிய அணிகளின் பார்வை எகிப்து கால்பந்து நட்சத்திரம் மோ சலா மீது திரும்பியுள்ள நிலையில், ரொனால்டோவின் மதிப்பு குறையும் என்றே கூறப்படுகிறது.
எகிப்திய நட்சத்திரம் மோ சலா
சவுதி புரோ லீக்கின் முகமாக எகிப்திய நட்சத்திரம் மோ சலாவை முன் பிறுத்த சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரொனால்டோவை விட பெருந்தொகைக்கு மோ சலாவை ஒப்பந்தம் செய்யவும் சவுதி அணிகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதில் அல்-இத்திஹாத் அணி வாயைப் பிளக்க வைக்கும் தொகையை முன்வைத்துள்ளது. 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மட்டுமின்றி, அடிப்படை ஊதியமாக 100 மில்லியன் பவுண்டுகள் வழங்கவும் அல்-இத்திஹாத் தயார் என அறிவித்துள்ளது.
ரொனால்டோவின் மதிப்பு
அத்துடன் தனி விமானம் அல்லது அவரது குடும்பத்திற்கு வரம்பற்ற விமான பயண டிக்கெட்டுகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
@getty
மோ சலா இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்வார் என்றால், 173 மில்லியன் பவுண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோவின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றே கூறுகின்றனர்.