Smartphone 100 சதவீத சார்ஜ் ஆன பின்னரும் மின் இணைப்பில் இருந்தால் என்ன நடக்கும்?
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே நேரம் பேட்டரிகள் நீண்ட நேரத்திற்கு நிற்கவில்லை, சீக்கிரமாகவே சார்ஜ் தீர்ந்து விடுகிறது என்பது பலரின் புகாராக உள்ளது.
இதனால் வெகுநேரம் சார்ஜ் போடுபவர்களும் ஏராளம். அதாவது 100 சதவீதம் சார்ஜ் ஆன பின்னரும் அதை மின்சார இணைப்பில் இருந்து பலரும் எடுப்பதில்லை.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் போடும் பொழுது 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பிறகும் தொடர்ந்து சார்ஜர் இணைப்பில் இருந்தால் வெடித்து விடுமோ என்ற ஐயம் தேவையில்லை.
நாம் உபயோகப்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களில் லித்தியம்-அயான்(li-io) பேட்டரி பயன்படுத்தப்படுகின்றன.
செயல்திறன் மிக்க லித்தியம் அயான் பேட்டரி வகையில் 98% அளவிற்கு சார்ஜ் ஏறிய பிறகு மின்னோட்டத்தின் வேகம் குறையத் துவங்கும். அதன் பின்னர் 100%-ஐ முழுமையாக அடைந்த பிறகு மின்னோட்டமானது முழுவதுமாக நிறுத்தப்படும்.
முன்பு பயன்படுத்தப்பட்ட லித்தியம் கார்பனேட் உள்ளிட்ட பேட்டரி வகைகளில் அதிக நேரம் சார்ஜ் ஏறினால் வெடிப்பது போன்ற பிரச்சனைகள் இருந்து இருக்கலாம். தற்பொழுது அதுபோன்ற ஐயங்கள் தேவையில்லை என்று தெரியவந்துள்ளது.