உங்கள் Smartphone ’ஹேங்’ ஆகி தலைவலி கொடுக்குதா? இப்படி செய்து பாருங்க உடனே தீர்வு
இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான்.
நாம் அனைவரும் பல நேரங்களில் அவசரநிலையில் தான் இருப்போம். ஆனால் நம் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை என்றுமே கேட்பதே இல்லை. சரியான நேரம் பார்த்து திடீரென்று ஹேங் ஆகி விடும்.
இதனால் பலரும் அடிக்கடி மொபைல் போனை திட்டியது கூட உண்டு. அப்படிப்பட்ட ஹேங் மொபைல்களை எப்படிப் பழையபடி வேகமாகச் செயல்பட வைப்பது என்று காண்போம்.
தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும்.
எந்த ஆப்ஸ்களையும் அன் இன்ஸ்டால் செய்யும் செட்டிங்கில் டேட்டாவை க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்யவும்.
போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை Force stop கொடுக்கவும்.
ஆண்டிராய்டு அசிஸ்டன்ட், க்ளீன் மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து Cache, thumbnails போன்றவற்றை க்ளீன் செய்யவும்.
மொபைல் போன்-க்கு வரும் எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மெயில்களைப் படித்துவிட்டு தேவையில்லை என்றால் உடனடியாக டெலீட் செய்யுங்கள்.
மொபைலில் முடிந்தவரை தேவையான காண்டாக்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு மீது உள்ளவற்றை டெலீட் செய்து விடுங்கள்.
ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் மெமரி கார்ட்டில் இன்ஸ்டால் செய்யவும். போன் மெமரியில் செய்யாதீர்கள்.
போன் மெமரியை எப்போதும் கால் பங்கு காலியாகவே வையுங்கள்.
2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேக்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி ரீசெட் செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஒருமுறைக்கு இரண்டு பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு ரீசெட் செய்யுங்கள்.
மொபைலின் மென்பொருளை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வரவேண்டும்.