Jio Phone 5G வெளியீடு எப்போது? விலை எவ்வளவு? வெளியான அட்டகாசமான தகவல்
ஜியோ தொலைபேசி 5 ஜி வெளியீட்டு தேதி ஏராளமான மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜியோ 5 ஜி தொலைபேசியின் விலை, வெளியீட்டு தேதி, விவரக்குறிப்புகள் மற்றும் பல சுவாரிஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.
உலகம் தொழில்நுட்பத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவருகிறது. அதற்கேற்ற மனிதர்களும் தங்கள் உபயோகிக்கப்படுத்தும் கேட்ஜெட்கள் மற்றும் அதற்கேற்ப வேகமான இன்டர்நெட் சேவையை பயன்படுத்த விரும்புகின்றனர்.
சர்வதேச அளவில், தற்போது 5ஜி கோபுரங்களை நாடுகள் அமைத்து வருகின்றன, விரைவில் இந்த சேவையை தனிநபர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதற்கான அனைத்து சோதனைகளும் நடைபெற்றுவருகின்றன. 5ஜி சோதனையில் பங்கேற்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் 5ஜி இணைப்புகளை சோதித்து வருகிறது. இந்நிலையில், 5ஜி திறன்களைக் கொண்ட ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. அது தான் Jio Phone 5G.
இந்த மொபைல் போன் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த வெளியீட்டு தேதியையும் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, வரும் ஜூன் 24-ஆம் திகதி ஜியோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது, ஜியோ அதன் 5ஜி மொபைல் போன் மற்றும் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
ஜியோ தொலைபேசிகள் எப்போதும் விலை குறைவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் புதிய Jio Phone 5G குறைவான, எளிய மக்கள் வாங்கக்கூடிய வகையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜியோ 5ஜி தொலைபேசி விலை ரூ. 5000 அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 480 5G SoC Processor இடம்பெறும் என்று கருதப்படுகிறது.