செல்போன் பேட்டரி செயலிழக்க காரணம் என்ன? செயலிக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
செல்போன் இல்லாதவர்களை காண்பதே அரிது என்றாகி விட்டது.
செல்போனில் முக்கிய அங்கமாக இருப்பது அதன் பேட்டரி.
செல்போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும், என்ன காரணங்களால் பேட்டரி செயலிழக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
நீண்ட நேரம் சார்ஜில் இருந்த பின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரி கதை முடிந்தது என அர்த்தம். புது பேட்டரி மாற்றுவதற்கு முன் அதே மாடல் பேட்டரி கிடைத்தால் போட்டு செக் செய்யலாம்.
விலை மலிவு என்பதற்காக போலி பேட்டரிகளை வாங்க வேண்டாம். அது நன்றாக இருக்கும் மொபைலையும் சேர்த்து கெடுத்துவிடும்.
சில பேட்டரிகள் வலுவிழுந்த யானையை போன்றது. தனக்குள் சக்தியை ஸ்டோர் செய்து, அதிலிருந்து மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும். சார்ஜ் போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மொபைல் இயங்கும். சார்ஜில் இருந்து எடுத்த உடன் மொபைல் ஆஃப் ஆகிவிடும். இந்த பேட்டரியை உடனே மாற்ற வேண்டும். ஆபத்துக்கு உதவுவதாக எப்போதும் சார்ஜிலே போட்டு பயன்படுத்தினால், அது மொபைலையே வீணடித்துவிடும்.
அனைத்து ரீசார்ஜபிள் பேட்டரிகளும் சூடாகும். ஆனால், அந்த சூடு வெளியே தெரியாத அளவுக்கு தயாரிக்கப்படும். அதையும் மீறி, பேட்டரி சூடானால் அதன் வாழ்நாள் முடிவை நெருங்குகிறது எனப் பொருள். அதே சமயம், எப்போது சூடாகிறது என்பதை கவனிக்கவும். நீங்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றினால், அதனால் கூட மொபைல் சூடாகலாம். காரில் சென்றால் கூட வெயில் படும் இடத்தில் மொபைல் நீண்ட நேரம் இருந்தால் சூடாகும்.
இப்போது பெரும்பாலான மொபைல்களில் பேட்டரியை தனியே எடுக்க முடியாது. அதனால் பேட்டரி உருமாறியிருக்கிறதா என்பதை ஸ்பின் டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஸ்பின் டெஸ்ட் என்றதும் பெரிய விஷயம் என நினைக்க வேண்டாம். சமதளத்தில், பேட்டரி இருக்கும் திசை கீழிருக்கும் படி மொபைலை வைக்கவும். இப்போது மொபைலை பம்பரம் போல சுற்றிவிட்டால், குண்டான பேட்டரி சுற்றும்.
சில பேட்டரிகள் நன்றாக சார்ஜ் ஏறும், 50% குறையும் வரை பிரச்னை இருக்காது. ஆனால், அதன் பின் சில நிமிடங்களிலே மொத்த சார்ஜும் குறைந்து மொபைல் ஆஃப் ஆகிவிடும்.
இதுவும், பேட்டரியின் பிரச்னைதான். இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால் அந்த பேட்டரியையும் மாற்றி விடுவது நல்லது.
பேட்டரியை மாற்றும்போது முடிந்தவரை அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றுவது நல்லது.