இப்படி செய்தால் உங்கள் செல்போன் பேட்டரி தீப்பிடித்து வெடிச்சிடும்... பலர் செய்யும் தவறு
செல்போன்களின் பேட்டரிகள் வெடிப்பது அல்லது தீப்பிடிப்பது என்பது சமீபகாலமாக நாம் அதிகம் படிக்கும் செய்தியாக உள்ளது.
ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடித்து தீப்பிடிப்பதற்கான காரணங்கள் என்ன?
வெப்பநிலை
ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பு வரையில் இருக்கும் போது நன்றாக இருக்கும். கடுமையான வெப்பநிலையில் அடிக்கடி மொபைலை வெளிப்படுத்தினால், அப்பழக்கம் பேட்டரிக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். நேரடி சூரிய ஒளி அல்லது மூடிய காரில் நீண்ட நேரம் இருந்தால் ஸ்மார்ட்போன் நன்றாக ஹீட்டாகி விடும். அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் உருவாகிறது. இவை ஸ்மார்ட்போன் வெடித்து தீப்பிடிக்க காரணமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: பிரபல ஐபோன் மொடல் விற்பனையை நிறுத்த ஆப்பிள் முடிவு? புகைப்படங்களுடன் கசிந்த தகவல்
தேவைக்கு மீறி சார்ஜ்
பல ஸ்மார்ட்போன் யூஸர்கள் தங்கள் மொபைல்களை இரவு தூங்கும் போது சார்ஜ் செய்ய துவங்கினால் காலை எழுந்த பின் தான் மொபைலை எடுப்பார்கள். இது சில நேரங்களில் பேட்டரி அதிகம் ஹிட்டாக வழிவகுக்கும். மேலும் நீண்ட நாட்களாக ஓவர் நைட் சார்ஜ் செய்யம் பழக்கம் கொண்டவர்களின் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
தேர்ட் பார்ட்டி சார்ஜர்
எப்போதும் ஒரிஜினல் கேபிள் மற்றும் அடாப்டருடன் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யவே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வேறு எந்த லோக்கல் அல்லது பிராண்டின் சார்ஜரை பயன்படுத்தினாலும் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி பாதிக்கப்படலாம்.
உடைந்த ஸ்மார்ட்போன்
உங்கள் ஸ்மார்ட்போன் மோசமாக உடைந்திருந்தால் கூட வெடிக்க அல்லது தீப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ஸ்மார்ட்போனின் மோசமான ஹேண்ட்லிங், அதனுள் பேட்டரியையும் சேர்த்தே சேதப்படுத்தும்.