லண்டனில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு மொபைல் திருட்டு: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
கலாச்சாரமும், வர்த்தகமும், தொழில்நுட்பமும் சந்திக்கும் மையமாக அமைந்துள்ள லண்டனில் வாழ்பவர்களுக்கும், அங்கு சுற்றுலா வருபவர்களுக்கும் பெரும் தொல்லையாக அமைந்துள்ளது ஒரு விடயம்.
அது, லண்டனில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு மொபைல் திருட்டுப் போகிறது என்ற செய்திதான்!
அது மொபைல் திருட்டு மட்டுமல்ல
இப்போது வங்கிப் பரிவர்த்தனை முதல் சமூக ஊடக பரிமாற்றங்கள் வரை அனைததையுமே மொபைல் போன்கள் மூலம் செய்யும் நிலை இருப்பதால், மொபைல் திருடப்படுவதால் இழக்கப்படுவது மொபைல் மட்டுமல்ல, தனிப்பட்ட தரவுகளும், பணமும் கூடத்தான்.
Credit: Dynamite News
2022ஆம் ஆண்டில் மட்டும், 90,864 மொபைல் போன்கள் திருட்டுப்போயுள்ளன. அதாவது, சராசரியாக, நாளொன்றிற்கு 250 மொபைல்கள் திருடப்பட்டுள்ளன என்கின்றனர் பொலிசார். சமீபத்திய பொலிஸ் தரவுகள், லண்டனில் ஆறு நிமிடங்களுக்கு ஒருமொபைல் போன் திருட்டுப்போவதாக கூறியுள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஆகவே, திருட்டைத் தவிர்க்க உதவுமாறு மொபைல் நிறுவனங்களுக்கு கோரிக்கைகள் வலுக்கின்றன.
Credit: Canva
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டுமே 8,500 மொபைல் போன்கள் திருட்டுப் போனதாக புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், 119 மொபைல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 14 முதல் 20 வயதுடையோர்தான் அதிக அளவில் மொபைல்களை பறிகொடுப்பதாக தெரிவிக்கிறார்கள் பொலிசார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |