இப்படி செய்வதால் உங்கள் ஸ்மார்ட்போன் வெடித்து விடும்! உஷாரா பார்த்துக்கோங்க
சார்ஜ் போட்டு அழைப்புகளை பேசுவதால் செல்போன் வெடிக்கும் அபாயம் உண்டு.
இரவு முழுவதும் போனை சார்ஜரில் வைப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும்.
ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அடிக்கடி நடைபெறுகிறது.
எவ்வளவு விலையுயர்ந்த போனாக இருந்தாலும், ஒரு சில தவறுகளால் அது வெடித்துவிடுகிறது. சில நேரங்களில் இது நிறுவனத்தின் தவறாக இருந்தாலும், பயனர்களின் தவறுகளாலும் இது நிகழ்கிறது.
செல்போன் வெடிப்பதற்கான முக்கிய காரணங்கள் குறித்து காண்போம்.
மூன்றாம் தரப்பு உற்பத்தியாளர்களின் சார்ஜர் மூலம் போனை சார்ஜ் செய்வது ஆபத்தானது. மூன்றாம் தரப்பு சார்ஜர்களில் பெரும்பாலும் போன்களைக் கொண்டு சோதிக்கப்படுவதில்லை.
91mobiles
இரவு முழுவதும் போனை சார்ஜரில் வைப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். பெரும்பாலானோர் தூங்கும் போது போனை சார்ஜில் போட்டுவிட்டு அயர்ந்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது பேட்டரியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
அதிக வெப்பம் போனின் பேட்டரியை சேதப்படுத்தும். இது செல்களை நிலையற்றதாகி, வெப்ப முறிவை இழக்கச் செய்கிறது. அதன்படி நேரடி சூரிய ஒளியில் மொபைலை வைக்கக்கூடாது.
அதிக அழுத்தம் நிறைந்த உபகரணங்களுக்கு அருகாமையில் ஸ்மார்ட்போன்களை எடுத்து செல்வது நல்லதல்ல.
News Group Newspapers Ltd
சார்ஜ் போட்டு அழைப்புகளை பேசுவதால், உங்கள் செல்போனிற்கு அதிகமான சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதன்மூலம் பேட்டரியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்று, திடீரென்று வெடித்து சிதறும். எனவே சார்ஜ் போட்டு பேசுவதை தவிருங்கள்.