பிரித்தானியா, பிரான்ஸ்... சவப்பெட்டியுடன் இறுதி ஊர்வலம் நடத்திய தாலிபான்கள்: வெளியான வீடியோ
அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானில் முழுமையாக வெளியேறிய நிலையில், அதை கொண்டாடும் விதமாக தாலிபான்கள் சவப்பெட்டியை வைத்து சில வேடிக்கையான இறுதிச்சடங்குகள் செய்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியிருந்தாலும், அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் திகதி வரை கெடு கொடுக்கப்பட்டிருந்தது. அதன் படி அமெரிக்க படையின் கடைசி விமானம் நேற்று இரவோடு இரவாக புறப்பட்டது.
அதில் கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு புகைப்படம் வெளியாகியிருந்தது. இதைக் கொண்டாடும் விதமாக ஆப்கானில் வானவேடிக்கை, துப்பாக்கிச் சத்தம் எல்லாம் கேட்டது.
இந்நிலையில், இன்று தாலிபான்கள் இதை கொண்டாடும் விதமாக வெற்றி அணி வகுப்பு நடத்தினர். அதில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நோட்டோவின் கொடிகைகளை சவப்பெட்டிகளில் வைத்து, அங்கிருக்கும் தெருக்களில் அணி வகுத்தனர்.
20 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், அதை கொண்டாடும் விதமாக ஆப்கான் தெருக்களில் தாலிபான்கள் ஏராளமானோர் கூடினர்.
அவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நோட்டோவின் கொடிகைகளை சவப்பெட்டிகளில் வைத்து இறுதிச்சடங்கு செய்வது போல் செய்தனர். அதைத் தொடர்ந்து, தலிபான்களின் சின்னத்தை பறக்க செய்தனர்.
இஸ்லாமியர்களின் பாரம்பரிய கோட்டையான கந்தஹாரில், ஆயிரக்கணக்கான மக்கள் தலிபான் கொடிகளை அசைத்தனர். அப்போது அந்த குழு இதை சுதந்திர தினம் என்று முழக்கமிட்டனர்.
இதற்கிடையில் தலிபான் தலைவர்கள் காபூல் விமான நிலையத்திற்கு சென்று, அதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
காபூல் விமானநிலையத்தில் தாலிபான் தலைவர் பேசுகையில், நாம் மேற்கத்திய படைகளை வெற்றி பெற்றுவிட்டோம். இது ஒரு வரலாற்று நாள், வரலாற்று தருணம், நாங்கள் ஒரு பெரிய சக்தியிலிருந்து நம் நாட்டை விடுவித்துள்ளோம்.
இது மற்ற படையெடுப்பார்களுக்கு ஒரு பெரிய பாடமாக அமையும், அது ஏன் உலகிற்கே இது ஒரு பாடம் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் காபூல் விமானநிலையமும் இப்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதால், அங்கு இன்னும் சில அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வெளிநாட்டு குடும்பங்கள் சிக்கியுள்ளதாகவும், அவர் மரண பயத்தில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.