அடுத்தடுத்த நாளில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிரபலமான பெண்கள்: வெளிவரும் பின்னணி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபலமான இரு மொடல்கள் தங்கள் சொகுசு குடியிருப்பில் அடுத்தடுத்த நாளில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில மைல்கள் தொலைவிலேயே
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மொடல்களாக செயல்பட்டுவரும் 31 வயதான Maleesa Mooney மற்றும் 32 வயது Nichole Coats என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டவர்கள். இருவரது குடியிருப்புகளும் சில மைல்கள் தொலைவிலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Credit: Instagram
இந்த நிலையில் Mooney என்பவரின் மரணம் படுகொலையாக விசாரிக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் Coats என்பவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் தற்போது கொலையாக விசாரிக்கப்படாது எனவும் விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே, Coats என்பவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், அது சாதாரண மரணமாக இருக்க வாய்ப்பில்லை எனவும், கொலையாகவே இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Credit: Instagram
செப்டம்பர் 10ம் திகதி குடும்ப உறுப்பினர்களே Coats என்பவரின் சடலத்தை அவரது குடியிருப்பில் கண்டெடுத்துள்ளனர். அவரை தங்களால் அடையாளம் காண முடியவில்லை எனவும், அந்த கோலத்தில் அவர் இருந்தார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Mooney என்பவரின் சடலம் செப்டம்பர் 12ம் திகதி மீட்கப்பட்டுள்ளது. பொலிசார் வழக்கமான விசாரணைக்கு சென்ற நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே, இருவரது மரண காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |