நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.., அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்
தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுதினம் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலையில் பனி மூட்டமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |