நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை.., இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும்?
காற்றழுத்த தாழ்வு பாதை நிலவும் காரணத்தினால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3°C இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |